சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்..!

More than 20 people fined for smoking in public places in Singapore

சிங்கப்பூரில் சுமார் இருபதுக்கு மேற்பட்டோருக்கு, தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை உணர்-கேமராக்களின் மூலம் அவர்கள், புகைபிடிக்கும் போது பிடிபட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளின் பொது இடங்களில் புகைபிடிப்போர் பற்றிய புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, பொது இடங்களில் வெப்ப நிலை உணர்-கேமராக்கள் பொருத்தப்பபட்டன.

இந்நிலையில், புகைபிடிக்கும் போது கேமராவில் சிவப்புப் புள்ளி தோன்றும். தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேமராவில் பதிவான படத்தைக் கொண்டு புகைபிடித்தவரை அடையாளம் காணும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தேசியச் சுற்றுப்புற அமைப்பு குடியிருப்புப் பகுதிகளில் புகைபிடிப்போர் பற்றி சென்ற ஆண்டு சுமார் 8000 புகார்களைப் பெற்றது.

இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டைவிட 2300 அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : Seithi