உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் பட்டியலில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: President Of Singapore Official Facebook Page

உலகின் 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் பட்டியலில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் 36வது இடத்தில் உள்ளார்.

2022ஆம் ஆண்டிற்கான The Royal Islamic Strategic Studies Centre என்னும் ஆய்வு மையம் தொகுத்த தரவரிசைப்படி அந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி – இந்தியாவிற்கும் வழிவகை செய்யும் திட்டம்

திருவாட்டி ஹலிமா 2017ல் அதிபர் பதவியை பெற்றார், அடுத்த ஆண்டு 2018 முதல் அந்த பட்டியலில் பெற்ற மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும்.

இந்த 2021ஆம் ஆண்டின் தரவரிசையில் அவர் 37வது இடத்தில் இருந்தார்.

முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் ஒரே சிங்கப்பூரர் திருவாட்டி ஹலிமா என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிர் ரிஸில் நடந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு