மோட்டார் சைக்கிளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது!

File Photo : Singapore Police arrested

 

செப்டம்பர் 6- ஆம் தேதி அன்று ஹவ்காங் அவென்யூ 1-ல் (Hougang Avenue 1) நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனதாக, வாகனத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோட்டார் சைக்கிள் திருடு போனது தொடர்பாக, மற்ற காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்

அப்போது, ஆங் மோ கியோ காவல்துறைப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இளைஞருக்கு வயது 22 ஆகும். அவரை காவல்துறையினர் இன்று (15/09/2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அவர் மீது நீதிமன்றத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இளைஞருக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி இந்தியாவின் ‘UPI’ செயலியுடன் இணையவுள்ளது!

மோட்டார் சைக்கிள் திருடுப் போகாமல் தடுக்க, மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய பிறகு சாவிகளை வெளியே எடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். சாவிகளை மோட்டார் சைக்கிள் பெட்டியில் விட்டுச் செல்ல வேண்டாம். திருட்டைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை ஒலி அமைப்பை மோட்டார் சைக்கிளில் ஏற்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.