2 லாரிகள் மோதிய விபத்தில் 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

Motorcyclist killed crash lorries PIE
(Photo: Facebook/SG Road Vigilante)

சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) 2 லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று (ஏப்ரல் 6) இரவு 7.50 மணியளவில், PIEன் ஜுராங் டவுன்ஹால் வெளியே நடந்த இந்த சம்பவம் குறித்து அவசர உதவி சேவைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மே 1 முதல் சிங்கப்பூர் வரும் பயணிகள் இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தலாம்!

அவர்கள் அங்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லாரியின் கீழ் சிக்கியிருந்ததை கண்டனர்.

பின்னர், ஏர்பேக்கைப் பயன்படுத்தி அவரை அதிலிருந்து விடுவித்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், சம்பவ இடத்தில் அவர் இறந்ததாக SCDF மற்றும் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) தெரிவித்துள்ளன.

லாரி ஓட்டுநர்களில் ஒருவரான 41 வயதான ஆடவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படுமா?