சிங்கப்பூர் மத்திய விரைவுச்சாலை விபத்தில் வாய்க்காலில் இறந்து கிடந்த ஆடவர் – தொடரும் விசாரணை..!

Motorist dies after accident along CTE
Motorist dies after accident along CTE (PHOTO: CNA)

சிங்கப்பூர் மத்திய அதிவேக விரைவுச்சாலையில் (CTE) நேற்று (ஜூன் 6) ஏற்பட்ட விபத்தில் 32 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, சரியாக காலை 9.22 மணியளவில் ஜலான் பஹாகியா (Jalan Bahagia) வெளியேறும் இடத்திற்கு அருகில் உள்ள செலேட்டர் விரைவுச்சாலை (SLE) திசையில், கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்தாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் புதிய 2 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

இந்த விபத்தில் 32 வயதான ஓட்டுநர் சம்பவ இடத்தில் இறந்ததாக ஒரு துணை மருத்துவரால் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF), விபத்து நடந்த இடத்திற்கு வந்தபோது அருகிலுள்ள வடிகால் ஒன்றில் அந்த ஆடவர் அசைவில்லாமல் கிடந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல் ஒரு ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி மீட்டெடுக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்தவர் மரணம் – மொத்தம் 25ஆக உயர்வு..!