விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – MOM சோதனை நடவடிக்கை

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாக இன்று (செப். 9) மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்தது.

நடமாட்டக் கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 13 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது கூறியுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் பங்களிப்பு, தியாகங்களை ஒப்புக்கொள்வது கூட கிடையாது” – சீ சூன்

இதில் தடுப்பூசி அணுகுமுறை பின்பற்றப்படும், இதன் மூலம் தடுப்பூசி போடப்படாத தனிநபர்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கட்டுப்பாட்டு தளர்வுகளை நோக்கிச் செல்லும்போதுதான், சமூகம் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் அவ்வப்போது கிருமித்தொற்று குழுமங்கள் ஏற்படுவதாக MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர், மேலும் கோவிட் -19 பரவுவதை பரிசோதித்து, கண்டறிந்து அதனை கட்டுப்படுத்த பல அடுக்கு சோதனை முறையை செயல்படுத்தியுள்ள நிலையில், இப்போது தங்குமிடத்தில் பரவும் கிருமிகளை கையாளத் தயாராக இருப்பதாக MOM கூறியுள்ளது.

பொழுதுபோக்கு நிலையங்கள்

அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை செல்ல முடியும்.

தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக சமூகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள்

500 ஊழியர்கள் (தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள்) ஒவ்வொரு வாரமும் ஆறு மணி நேரம் குறிப்பிடப்பட்ட இடங்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 பாதிப்பு இல்லை என்று உறுதியானவர்கள் விடுதிகளை விட்டு செல்ல முடியும்.

ART விரைவு சோதனை

செல்வதற்கு முன் மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு ஊழியர்கள் ART விரைவு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் ஊழியர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட இடம் லிட்டில் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாட்ட அளவை எவ்வாறு பாதுகாப்பன முறையில் விரிவுபடுத்துவது என்பதை அறிய ஒரு மாதத்திற்குப் பிறகு MOM அதனை மறுஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளது.