சிங்கப்பூரில் MRT பாதைகளில் ஓடும் 40 பழைய ரயில்கள் மாற்றம்..!

MRT ageing trains replaced
(PHOTO: Land Transport Authority)

சிங்கப்பூரின் 20 ஆண்டுகளாக சேவையில் இருந்த, இரண்டு பழமையான MRT பாதையில் ஓடும் 40 ரயில்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கனேடியன் (Canadian) ரயில் உற்பத்தி நிறுவனமான பொம்பார்டியர் (Bombardier) இந்த புதிய ரயில்களை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடங்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த அறிக்கை..!!

சுமார் S$337.8 மில்லியனுக்கு வாங்கப்பட்ட புதிய ரயில்கள், 2024ஆம் ஆண்டு முதல் படிப்படியாக வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் இயக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று (செப்டம்பர் 28) தெரிவித்துள்ளது.

முதன்முதலில்1995ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெர்மன் பொறியியல் நிறுவனமான சீமென்ஸ் (Siemens) நிறுவனத்தின் 19 இரண்டாம் தலைமுறை ரயில்களையும், 2000ஆம் ஆண்டில் இயங்க தொடங்கிய கவாசாகி-நிப்பான் ஷாரியோவிலிருந்து (Kawasaki-Nippon Sharyo) 21 மூன்றாம் தலைமுறை ரயில்களும் அதில் மாற்றப்பட உள்ளன.

புதிய ரயில்கள், சுவீடன், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட பாகங்களுடன், சீனாவின் Changchun நகரில் தயாரிக்கப்பட்டது.

ரயில்களின் நிபந்தனைகளை கண்காணிக்கும் அம்சங்கள், பயணிகள் சேவையை பாதிக்கும் குறைபாடுகளை முன்கூட்டியே தீர்க்க உதவும் அம்சங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான தள்ளுவண்டி மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கும் இதில் அதிக இடங்கள் இருப்பதாகவும், ரயில் பயணம் குறித்த தகவலுடன் கூடிய புதிய LCD திரைகளும் அவற்றில் இருக்கும் என்றும் LTA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வீட்டிற்கு வெளியே தேசியக் கொடியைக் கட்டியுள்ளவர்கள் கவனத்திற்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…