புதிய MRT ரயில் கட்டமைப்பு வரைபடம் உங்கள் பயணத்தை இனி எளிதாக்கும்..!

MRT navigation made easier with user-friendly map (PHOTO: LTA)

சிங்கப்பூர் முழுவதும் உள்ள பயணிகள் இந்த புதிய இலகுவான MRT வரைபடத்தின் உதவியுடன் தங்கள் பயணங்களை மிக எளிதாக அமைத்துக்கொள்ள முடியும்.

இதில் குறிப்பாக, உட்லேண்ட்ஸில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் லைன் (TEL) முதல் மூன்று நிலையங்களைத் திறப்பதன் மூலம் அதிக இணைப்பை அவர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உட்லேண்ட்ஸ் நார்த், உட்லேண்ட்ஸ் மற்றும் உட்லேண்ட்ஸ் சவுத் நிலையங்களுக்கு இடையில், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் பயணிகளுக்கு இலவச பயணமும் வழங்கப்படும் என்று தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும், நீர்வழிகளையும் எடுத்துக்காட்டும்படி ரயில் வரைபடம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்குச் செல்லும் கட்டணத்தைக் கணக்கிடுவதற்கான QR குறியீடும் வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

மேலும், இந்த வரைபடத்தை, சிங்கப்பூரின் அதிகாரபூர்வ நான்கு மொழிகளிலும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய QR குறியீடுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.