ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையும் மேலும் 4 MRT ரயில் நிலையங்கள்!

(Photo: Wikipedia)

ஜூரோங் வட்டாரப் பாதையில் மேலும் நான்கு MRT ரயில் நிலையங்கள் கட்டப்படவுள்ளதாகவும், நடப்பு காலாண்டில் இதன் கட்டுமான வேலைகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜூரோங் வட்டாரப்பாதையில் உள்ள மூன்றாம் கட்டத்தில் அந்நிலையங்கள் அமையும் என்றும், வரும் 2029ஆம் ஆண்டில் கட்டுமானங்கள் முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தடி துணை மின்நிலையம் சிங்கப்பூரில்!

நிலப் போக்குவரத்து ஆணையமானது S$263 மில்லியன் மதிப்புடைய இரண்டு ஒப்பந்தங்களையும் நேற்று வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மேம்பாலச் சாலை பணிகளும் இதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றின் காரணமாக ஓராண்டுகளாக ஜூரோங் வட்டாரப் பாதையில் கட்டுமானம் தாமதிக்கப்பட்டதாகவும் மேலும் இந்த பாதையானது 2027 முதல் 2029க்குள் படி படியாக திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானப்பணிகள் முடிவடைந்தபின் இந்த பாதையானது 24 நிலையங்களையும் சுவா சூ காங், பூண் லே, ஜூரோங் ஈஸ்ட் ஆகிய நிலையங்களில் சந்திப்பு நிலையங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நான்கு புதிய ரயில் நிலையங்களால் பயணிகள் பயண நேரமானது 30 நிமிடமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்நாட்டில் ஒருவர் உட்பட புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி!