ரயில் பெட்டியில் திடீரென வெளியான வெள்ளை புகை… பதற்றத்துடன் இறங்கிய பயணிகள் – காரணம் என்ன?

kembangan-mrt-white-smoke

ரயில் பெட்டி ஒன்றில் திடீரென வெள்ளை புகை வெளியானதை அடுத்து, கெம்பாங்கன் MRT நிலையத்தில் பயணிகள் இறங்க வேண்டியிருந்தது.

சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு பாதை MRT ரயிலில் இந்த சம்பவம் நடந்தது. இதனை அடுத்து அதில் பயணித்த பயணிகளுக்கு சற்று பீதி ஏற்பட்டது.

கையில் ஆயுதத்துடன்.. போலீசுக்கு அடங்க மறுத்த ஆடவரை Taser துப்பாக்கியில் சுட்டிபிடித்த போலீஸ்!

நேற்று வெள்ளிக்கிழமை (மே 20) மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், வெளிவந்த வெள்ளைப் புகையை பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று பார்ப்பதைக் காணலாம்.

அந்த புகை காரணமாக பெட்டியில் கருகும் வாடை வந்ததாகவும் அந்த வீடியோ கமெண்ட் பிரிவில் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் யாகூ அறிக்கையின்படி, ரயில் பெட்டியில் வெள்ளை புகை வெளியானது உறுதிப்படுத்தப்பட்டது.

Freon வாயுவை வெளியிடும் AC கம்ப்ரசர் கசிவு காரணமாக இந்த புகை ஏற்பட்டதாக பின்னர் கண்டறியப்பட்டது.

Work permit அனுமதி காலாவதி… “வேலை வேண்டும்” என்ற நோக்கில் கட்டுமான தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை