உதவி தேவைப்படும் நபர்களை பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்கு பதில், எங்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள் – MSF..!

MSF corrects errors in viral posts about elderly cleaner, urges public to use less ‘distressing’ means to help the needy
(Visuals/Unsplash)

சிங்கப்பூரில் நிதி உதவி தேவைப்படும் நபர்களை பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்கு பதிலாக, தனது கவனத்திற்குக் கொண்டு வருமாறு சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற பதிவுகளை இணையத்தில் வெளியிடுவது அவர்களுக்கு மேலும் சிரமத்தையும், அவர்களது குடும்பத்தினருக்கு அதிக மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர்-மலேசியா விரைவு ரயில் திட்டம்; இருநாட்டுப் பிரதமர்களும் கையெழுத்து..!

ஏனெனில், இதுபோன்ற பதிவுகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் Koh Meng Shuen என்பவர், MRT ரயிலில் துப்புரவாளராகப் பணிபுரிந்த 82 வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்ததைப் பற்றி எழுதியதை அடுத்து, அமைச்சின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது. மேலும், அவர் செய்த பதிவில் இருந்த தவறான தகவல்கள் பற்றியும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

தனது பதிவில், அந்த மூதாட்டி ஒரு துப்புரவாளராக பணிபுரிகிறார், ஒரு நாளைக்கு வெறும் S$20 சம்பாதித்தார், மேலும் வாழ்க்கையை நடத்த அதிக வேலைகளை எதிர்பார்க்கிறார் என்றும், மேலும் அவர் தனது நண்பர்களுடன் வசிப்பதாக அவரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

சமூக சேவை அதிகாரிகள் அந்த மூதாட்டியை அடையாளம் கண்டு, அவருக்கு ஏதாவது ஆதரவு தேவையா என்று பார்க்க சென்றதாக பதிவை கண்ட MSF தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த மூதாட்டி தனது மகனின் குடும்பத்துடன் ஐந்து அறைகள் கொண்ட பிளாட்டில் வசித்து வருகிறார் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் தனது சொந்த செலவுக்காக அவர் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மாதத்திற்கு மொத்தம் S$1,300 சம்பளத்தைப் பெற்றார். கிருத்தொற்று பரவல் காரணமாக அவரது வருமானம் S$675 என குறைந்தது. இதனால் COVID-19 ஆதரவுத் திட்டத்திற்கு அவர் தகுதிபெறுகிறாரா என்பது பரிசீலிக்கப்பட்டது.

அனால், அவர் ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆதரவுக்குத் தகுதிபெற்றிருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அன்றாட தேவைக்கு உதவும் நோக்கில் பற்றுச்சீட்டுகளை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg