தன் இரு மகள்களையே பல ஆண்டுகளாக நாசம் செய்து வந்த கொடூர தந்தை: 428 ஆண்டுகள் சிறை, 240 கசையடி விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்

Harian Metro YouTube

மலேசியாவில் 56 வயதுமிக்க ஆடவர் ஒருவருக்கு 428 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுமார் 240 கசையடிகளும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 15 மற்றும் 19 வயதுமிக்க தனது இரு மகள்களை அந்த கொடூர தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் இந்த நிலையில் இருந்தால் சிறை நிச்சயம்: சிங்கப்பூர் to திருச்சி… சிக்கிய ஊழியருக்கு சிறை

அதோடு மட்டுமல்லாமல், தனது மனைவியையும் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டியதற்காகவும் இந்த அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் தனது மகள்களை பாலியல் நாசம் செய்துள்ளார் எனவும், இயற்கைக்கு மாறான பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நரிமன் பதுருதீன் கடந்த செப்டம்பர் 20 அன்று இந்த தீர்ப்பை வழங்கியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தனது 47 வயதுமிக்க மனைவியை மிரட்டிய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

MRT ரயிலில் சிறுநீர் கழித்த பெண் – வீடியோ வைரல்.. நெட்டிசன்கள் காட்டம்