சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்துவதில் நியாயமற்ற செயல்முறை; சந்தேகிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்..!

சிங்கப்பூரர்கள் மற்றும் PR-கள் இரண்டில் 3 பேருக்கு மாத சம்பளம் S$5,000க்கு மேல்... நல்ல சம்பளம் கொண்ட 900 வேலைகள்
(Photo: TODAY)

சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்தும் செயல்முறைகளில் நடுநிலையாக செயல்படாத நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 47 நிறுவனங்களை அதன் நியாயமான கருத்தாய்வு கட்டமைப்பின் (FCF) கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH

மனிதவள அமைச்சகம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 5) ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் வேலைக்கு அமர்த்தும் செயல்முறைகளில் நடுநிலையாக செயல்படாத 47 முதலாளிகள் அதன் நிறுவனங்களின் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக நம்பப்படுவதாக குறிப்பிட்டது. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை அமைச்சகம் குறிப்பிடவில்லை.

அவர்களில் பெரும்பாலோர் நிதி மற்றும் தொழில்முறை சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், உற்பத்தி மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், நியாயமற்ற முறையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை கொண்டிப்பதாக சந்தேகிக்கப்படும் கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே கூறினார்.

குறிப்பாக, இதுபோன்ற முதலாளி பெயர்களை வெளியிடுவதன் மூலம், விதிகளை மீற எண்ணும் முதலாளிகளை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்று தவறான முதலாளிகளின் பெயர்களை வெளியிடுவதன் மூலம், வேலை தேடுபவர்களும் சிறந்த தகவல்களை வைத்திருக்க முடியும் என்றார்.

இதுபோன்ற நியாயமற்ற நடைமுறைகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று MOM தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேசிய தினம்: தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg