சிங்கப்பூர் வந்த இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி குழுவுக்கு ‘புவிசார் அரசியல்’ குறித்து விளக்கம்! புவிசார் அரசியல் என்றால் என்ன?

National Defence College Jawed Ashraf regional geopolitics
National Defence College Jawed Ashraf regional geopolitics

மூத்த பாதுகாப்பு தலைமைக்கான இந்தியாவின் முதன்மை தேசிய பாதுகாப்பு நிறுவனமான தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்து சிங்கப்பூர் வந்த குழுவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹை கமிஷ்னர் ஜாவேத் அஷ்ரஃப் அந்த குழுவுடன் உரையாற்றிய போது, இந்தியா – சிங்கப்பூரின் கூட்டு பிராந்திய புவிசார் அரசியல் குறித்தும் அதுகுறித்த மேலும் பல விவரங்களை எடுத்துரைத்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

புவி சார் அரசியல் என்றால் என்ன என்பது குறித்து ஒரு எடுத்துக்காட்டுடன் இங்கே பார்ப்போம்…

இனிவரும் காலங்களில் உலக நாடுகளில் வல்லமையை நிர்ணயிக்கப்போவது, ‘இந்தியப் பெருங்கடல்’-தான். அதன் அதிகாரத்தை முழுவதும் எந்த நாடு கைப்பற்றுகிறதோ, அந்த நாடே உலகத்தின் வலிமைமிக்க நாடாக மாறும் என்று கூறப்படுகிறது. அதற்கான முயற்சிகளில் பல நாடுகள் இறங்கிவிட்டன. உலகில் நடக்கும் வணிகங்களில் 70 சதவிகித கடல்வழி வணிகம் இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் நடந்துவருகிறது. நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியப் பெருங்கடலுக்குச் சொந்தக்காரர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் தமிழர்களே. இந்தப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் இடத்தில்தான் தமிழகமும், தமிழீழமும் இருக்கின்றன. இதனால்தான் இந்தியப் பெருங்கடலுக்குத் ‘தமிழர் கடல்’ என்று பெயர் சொல்கிறார்கள். இந்திய பெருங்கடல் அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணமே புவிசார் அரசியல் என்று சொல்லலாம். இது வெறும் உதாரணம் மட்டுமே. இது போல, புவி சார்ந்து நடத்தப்படும் அரசியல் புவிசார் அரசியல் என்றழைக்கப்படுகிறது.