HDB நுழைவு, நடைபாதை பகுதிகளில் புகைபிடிப்பவருக்கு இனி சம்மன் அனுப்பப்படும்.!

சிங்கப்பூரில் HDB நுழைவு, நடைபாதை பகுதியில் இனி புகைபிடிப்பவர்கள் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்படும், என தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் HDB பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டு வரும் தெர்மல் கேமரா மூலம் HDB நுழைவு, நடைபாதை போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் பிடிபடுவார்கள். புகைபிடித்தல் சட்டம் பிரிவு 3 (1) கீழ் HDB பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

தெர்மல் கேமராவில் பிடிபட்டவர் வசிக்கும் HDB குத்தகை உரிமையாளருக்கு முதலில் கடிதம் அனுப்பப்படும், அந்த கடிதத்தின் படி குத்தகை உரிமையாளர் கேமராவில் பிடிபட்டவர் தொடர்பான அனைத்து தகவலையும் தர வேண்டும் என NEA தெரிவித்துள்ளது.

HDB குத்தகை உரிமையாளர் 14 நாட்களுக்குள் கேமராவில் பிடிப்பட்டவர் சம்பந்தமான தகவலை தர தவறினால், புகைபிடித்தல் சட்டம் பிரிவு 4B படி $2000 வெள்ளி குத்தகை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.