சிங்கப்பூரர்கள் நெட்ஸ் ஏடிஎம் கார்டை (Nets ATM) இனி மலேசியாவிலும் பயன்படுத்தலாம்..!

மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், இனி நெட்ஸ் கார்டுகளை (Nets ATM) அங்கே பயன்படுத்த முடியும்.

சிங்கப்பூரர்கள் தற்போது தங்கள் நெட்ஸ் ஏடிஎம் கார்டுகளைப் மலேசியாவில் 7,400 இடங்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, மேல் ஜொகூர் பாரு, மேலகா, கோலாலம்பூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் சுற்றுலா மற்றும் சில்லறை விற்பனை இடங்களிலும் இந்த கார்டை பயன்படுத்தலாம்.

அதேபோல், மலேசியாவின் PayNet MyDebit ஏடிஎம் அட்டைகளை சிங்கப்பூரில் சுமார் 500 இடங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஸும், மலேசிய பேநெட்டும் தங்கள் எல்லை தாண்டிய கட்டண சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

நெட்ஸ் மலேசியாவில் தனது வணிகர்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 10,000 ஆகவும், 2021 மையப்பகுதியில் 50,000 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன் கட்டண முறை சிங்கப்பூரில் சுமார் 102,000 இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் நெட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய எல்லைக் கடந்த உடனடி பணப் பரிவர்த்தைக்கான சாத்தியங்களையும் நெட்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.