அண்மை வாரங்களாக, தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் புதிய பரவல்..!

New COVID-19 clusters reported at 3 dormitories
Photo: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் அண்மை வாரங்களாக, முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலிருந்து 41 பேர் நீக்கம்..!

புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள்:
  • 51 அட்மிரால்டி ரோடு வெஸ்ட்டில் உள்ள Cochrane Lodge 1
  • 460 Mandai ரோட்டில் உள்ள Mandai Lodge 1
  • 1 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 12இல் உள்ள துவாஸ் சவுத் தங்கும் விடுதி

ஆகியவற்றில் புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்துள்ளது.

Cochrane Lodge 1

முந்தைய 9 சம்பவங்கள் Cochrane Lodge 1 உடன் தொடர்புடையது. கடந்த ஜூலை 21 அன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த விடுதி கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 370க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.

Mandai Lodge 1

மேலும் 17 சம்பவங்கள் Mandai Lodge 1 உடன் தொடர்புடையது என்று MOH தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14 அன்று, மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த தங்கும் விடுதியில் நோய்த்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

துவாஸ் சவுத் தங்கும் விடுதி

முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட 11 சம்பவங்கள் துவாஸ் சவுத் தங்கும் விடுதியுடன் தொடர்புடையது என்று MOH தெரிவித்துள்ளது.

இந்த விடுதியில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று நோய்த்தொற்று இல்லை அறிவிக்கப்பட்டது. இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 1,300க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பறவைகளுக்கு உணவு அளிப்போருக்கு கடுமையான அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…