சிங்கப்பூர் செய்திகள்

COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்..!

new daily high of 1,164 discharged patients
New daily high of 1,164 discharged patients

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 1,164 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 14) குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தினசரி குணமடைவோர் எண்ணிக்கையில் ஆக அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முதல் தடவையாக 1000-ஐ கடந்துள்ளது.

இதையும் படிங்க : “சர்க்யூட் பிரேக்கர்” எனும் அதிரடி நடவடிக்கை தொடங்கியதிலிருந்து குடும்ப வன்முறை அதிகரிப்பு – SPF..!

அதாவது மொத்தம் 5,973 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1,072 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர் மேலும் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 19,032 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 752 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Related posts