சிங்கப்பூரில் உள்ள இந்த இரண்டு சந்தைகளை மூட உத்தரவு.!

new locally transmitted infections
Pic: Daryle Dale De Silva & Google Maps

சிங்கப்பூரில் உள்ள ஹேக் ரோடு (Haig Road) சந்தை, உணவு நிலையம் மற்றும் சொங் பாங் (Chong Pang) சந்தை ஆகியவை 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. 35 பேருக்கு அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (21-07-2021) முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை அந்த இடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் ஹேக் ரோடு (Haig Road) சந்தை, உணவு நிலையத்திலும், 10 பேர் சொங் பாங் (Chong Pang) சந்தையிலும் தொடர்புடையவர்கள்.

அங் மோ கியோவில் உள்ள சொங் பூன் (Chong Boon) சந்தை, உணவு நிலையம் ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அவசியம் – MOH

சிங்கப்பூரில் உள்ள Club MX Ktv நிலையத்தில் கிருமித்தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அந்த நிலையத்திற்கு சென்றிருந்தவர்கள் உடல் நலத்தை கவனிக்குமாறும், மற்றவர்களுடன் சமூக அளவில் கூட வேண்டாம் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் சந்தை, உணவு நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவு, பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிட ஜூலை 22 முதல் அனுமதி இல்லை