சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பாசிர் பாஞ்சாங் வரலாற்றை வெளிப்படுத்த புதிய பூங்கா அமைப்பு.!

New Pasir Panjang Park
Pic: NParks

சிங்கப்பூரில் பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang) வட்டாரத்தின் வரலாற்று மற்றும் இயற்கைச் சூழலை வெளிப்படுத்தும் விதமாக, அதன் சமூகத்தினர் புதிய பூங்கா ஒன்றை வடிவமைத்துள்ளனர். பாசிர் பாஞ்சாங் என்பதற்கு மலாய் மொழியில் பொருள் மணல் நிறைந்த நீண்ட கடற்கரை என்பதாகும்.

இந்த புதிய பூங்கா அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக திறக்கப்பட உள்ளது. இயற்கை, கடல்துறை வரலாறு போன்ற அம்சங்களுடன் இது அமைக்கப்படும் என தேசிய பூங்கா கழகம் நேற்று (17-10-2020) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்கூட் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்தியப் பயணிக்கு 4 மாதச் சிறை..!

இந்த பூங்காவுக்கு வருபவர்களிடம் பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தின் வரலாற்று பற்றி எடுத்துரைக்கப்படும் என்றும், இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள்கள், நிகழ்ச்சிகள்  ஆகியவற்றின் மூலம் பாசிர் பாஞ்சாங் சிறப்புகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் தேசிய பூங்கா கழகம் குறிப்பிட்டுள்ளது.

பாசிர் பாஞ்சாங்கின் கதையை இதன் மூலம் அறியலாம் என்றும், பாசிர் பாஞ்சாங்கின் தொடர்பான படங்கள், தகவல்கள் ஆகியவற்றை மேலும் பலர் பகிர்ந்துகொள்ள இது ஊக்குவிக்கும் என்றும் பூங்கா கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட துறைமுகம் தொடர்பான பொருள்களும், பூங்காவின் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts