சிங்கப்பூரில் புதிதாக நான்கு சுற்றுலாத் தளங்களை அறிமுகம்.!

(Photo: HomeJournal)

கோவிட்-19 காரணமாக அதிக பின்னடைவைச் சந்தித்துள்ள சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக நான்கு சுற்றுலாத் தளங்களை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கிளார்க் கீயில் விறுவிறுப்பான ஸ்லிங்ஷாட் என்ற சாகச விளையாட்டும், டெப்ஷி வட்டாரத்தில் கட்டப்படும் ஐஸ்க்ரீம் அருங்காட்சியமும் இவ்வாண்டிற்குள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொறுப்பிலிருந்து விலகும் துணைப் பிரதமர் ஹெங் – தன்னலமற்ற முடிவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லீ

மேலும், செந்தோசாவில் அமையவுள்ள ஸ்கைஹெலிக்ஸ் வருகின்ற ஆண்டு செயல்படும் என்றும், இது தெற்கு கடற்கரையை நோக்கும் விதத்தில் சுமார் 35 மீட்டர் உயரத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்லக்கூடியவகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாமர்செட் ஸ்கேட் பார்க் மற்றும் கிலினி சாலைக்கும் இடையில் உள்ள இடத்தில் இன்னொரு சுற்றுலாத் தலம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் கிறிஸ்மசை முன்னிட்டு புதிய அலங்காரங்கள் நிறுவப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்கள் நடைபெற்ற சுற்றுலாத் தொழில்துறை மாநாட்டில் அரங்கேறியதாகவும், இதன் மூலம் பார்வையாளர்களை ஈர்க்க உதவும் என்றும் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் ஐஸ்க்ரீம் அருங்காட்சியமானது இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என்றும், இந்த அருங்காட்சியமானது அமெரிக்காவிற்கு வெளியே அமையும் முதல் அருங்காட்சியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவால் இந்தோனேசியா, திமோர்-லெஸ்டேவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – சிங்கப்பூர் ஆழ்ந்த அனுதாபம்