சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

NINE CASES IN DORMITORIES
(Photo: Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒன்பது COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதில் ஆறு முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டன. கிருமி மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் மன உளைச்சலைப் போக்க இணையம் வழி பாடல் போட்டி..!

மேலும், மீதமுள்ள மூன்று பாதிப்புகள் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றிலிருந்து மேலும் 71 நபர்கள் குணமடைந்து மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனுடன் சிங்கப்பூரில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 57,142ஆகக் உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துவமனையில் 27 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர், மேலும் 362 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் பராமரிக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் தொற்று காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் இருபத்தேழு பேர் இறந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நடவடிக்கையில் 8 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…