லெபனான் வெடிப்பு சம்பவத்தில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பா.? – வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.!

Photo: Reuters

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (04.08.2020) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

இந்த விபத்தில் தற்போது வரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சகத்துடன் பதிவு செய்துகொண்ட சிங்கப்பூரர்களைத் தொடர்கொண்டதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட் வெடிப்பு சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. மேலும், விபத்தில் பலியான குடும்பத்தினருக்கும், லெபனான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சக ஊழியர் தன்னை விட சிறப்பாக நடத்தப்படும் வெறுப்பில் வாகனத்தை சேதப்படுத்தியவருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg