இனி இந்த நாட்டிற்குச் செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது!

Photo: Freepik

வருகின்ற நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து சரியான முறையில் 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களுக்கு, தடைகளை நீக்கி தன் எல்லைகளை அமெரிக்கா அரசு திறக்கப் போகிறது.

கோவிட் 19 தொற்றுப்பரவலை தடுத்து, தொற்று மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்கா கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, தனது எல்லைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் காலம் குறைப்பு!

கடந்த ஆண்டு ஜனவரியில் சீனாவிலிருந்து விமானம் வழியாக வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையை கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, எப்போது நீக்கப்படும் என்ற எந்தவித விளக்கமுமின்றி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்தார்.

இதுவரை நடைமுறையில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளினால், உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் வெளிநாட்டினர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள தங்களுடைய சொந்த பந்தம், நண்பர்கள் மற்றும் தாெழில் ரீதியான உறவுகளை சந்திக்க முடியாமல் கஷ்டத்திலும், கவலையிலும் உள்ளனர்.

வரும் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து சரியான முறையில் 2 தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டுக் கொண்ட வெளிநாட்டினர்களுக்கு மட்டும் அமெரிக்காவிற்குள் வர அனுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வான்வழி மற்றும் நிலவழி எல்லைகளின் பழைய கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை நீக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா நட்பு நாடுகள் பல பாராட்டி வருகின்றன.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களைச் அரசிடம் சமர்பிக்க வேண்டும்.

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன், குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுப் பரவல் “Negative” என்பதற்கான பரிசோதனைச் சான்றுகளையும் சமர்ப்பிப்பது கட்டாயம்.

இந்த விதிமுறைகளை கடைபிடித்து சரியான முறையில் முழுமையாக 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்ட இந்தியர்களும் அமெரிக்கா செல்ல விண்ணப்பிக்கலாம் என தெரியவந்துள்ளது.

தடைகள் நீக்கபட்டதன் முதற்படியாக, சாலை வழி எல்லைகள் மற்றும் கனடா, மெக்ஸிகோவிலிருந்து வந்து செல்லும் கப்பல்கள் ஆகியவற்றிற்கான கட்டுபாடுகள் நீக்கப்படும் என்று அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.

ஜூரோங் தங்குவிடுதியின் ஆய்விற்கு பின் மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை!