சிங்கப்பூரில் தொடர் வெற்றிகளை கொடுத்த Noise and Grains-ன் புதிய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!

"All Love No Hate" a live in concert with Sid sriram happening in your nearest cities (Photo: Noise and Grains)

“All Love No Hate” a live in concert with Sid sriram : தற்போது இருக்கும் பின்னணி பாடகர்களில் சித் ஸ்ரீராம் அதிக ரசிகர்களை கொண்டவர் என்றே கூறலாம், அந்த அளவிற்கு தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார்.

கடந்த 2013ல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டின் 71வது குடியரசு தினவிழா…!

இந்நிலையில், அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார்.

சிங்கப்பூரில், Noise and Grains பல நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வெற்றிகண்ட ஒரு நிறுவனம், அதாவது நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்கி வருகின்றனர்.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது.

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கும் இந்நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் தேதி கொச்சியிலும், மார்ச் 7ஆம் தேதி மதுரையிலும் மார்ச் 13ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் களைகட்டிய தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் – முழு தொகுப்பு..!

இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ.ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் போன்ற பல இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.