சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு

Pic: Joshua Lee/Mothership

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு 15,700 சரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 16 முதல் ஜூன் 13 வரை, சிங்கப்பூர் 2ம் கட்டத்தில் (HA) நுழைந்தபோது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பேருந்தில் சிறுமி உட்பட 2 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட முதியவருக்குச் சிறை

இந்த சரிவு முக்கியமாக வெளிநாட்டு ஊழியர்களால் ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தனது அறிக்கையில் இன்று (ஜூலை 30) தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு நடவடிக்கை காரணங்களுக்காக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, சொந்த நாட்டுக்கு சென்ற ஊழியர்களுக்கு பதில் வேறொருவர் பணியில் ஈடுபடுத்தப்படாததால், பெரும்பாலான துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்துள்ளதாக MOM கூறியுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உணவு, பானம் மற்றும் சில்லறைத் துறையில் மொத்த நிகர சரிவுக்கு பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் பங்காளித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

மேலும், முதல் காலாண்டில் இருந்ததை விட மெதுவான வேகத்தில் குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களை தவிர்த்து, குடியிருப்பாளர்களின் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 3,352,400ஆக இருந்தது, இது மார்ச் மாதத்தில் 3,368,000ஆக இருந்தது.

மூன்று வாகனம் சம்மந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழப்பு