“உன் புட்டத்தை (Butt) தொட்டால் சும்மா விடுவியா ” – ஆத்திரமடைந்த பயணி ஆவேசமாக தாக்கிய வீடியோ அரை மில்லியன் பார்வைகளை கடந்தது

north east line singapore train violence speech passenger

சிங்கப்பூரின் North East Line (NEL) பாதையில் செல்லும் MRT ரயிலில் பயணித்த நபர் ,தனது புட்டத்தில் (Buttox) யாரோ ஒருவர் தொடுவது போல உணர்ந்ததால் ரயிலில் அவருக்கு அருகில் நின்றிருந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.தொடர்ந்து கூச்சலிட்டு அந்த நபரின் முரட்டுத்தனமான தாக்குதல்களால் சக பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிடப்பட்ட ஒரு நாளிலேயே அரை மில்லியன் பார்வைகளையும், 2000 பகிர்வுகளையும் பெற்றுள்ளது.ஜூன் 6ஆம் தேதி Farrer Park நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆத்திரத்தில் அந்த நபர் “உங்களால் இதை கடந்து செல்ல முடியுமா? என் புட்டத்தை தொட்டு உரசவா ? என்ன?” என்று குரலை உயர்த்தி பேசியுள்ளார்.

வீடியோ எடுத்த நபர் உடனடியாக குறுக்கிட்டு சினம் கொண்ட நபரை அமைதிப்படுத்த முயற்சித்தபோது , ஆனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர் ,வீடியோ எடுத்த அந்த நபரை நோக்கி “Eh f*ck you, who are you?” என்று கடுமையாக பேசியுள்ளார்.“நீ வீடியோ எடு! நான் கவலைப்பட மாட்டேன் ”என்று கூறிக்கொண்டே கையால் கேமராவை மறைக்க முயற்சிக்கிறார்.

“என்னுடைய பின்பக்கத்தை தொடாதே என்று மக்களிடம் சொல்ல எனக்கு உரிமை உண்டு ” என்பதை சகபயணிகள் சுட்டிக் காட்டுவதன் மூலம் அவரது சட்டத்தை குறைக்க முயற்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் பேசிய அவமதிப்பான வார்த்தைகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. ஆத்திரமடைந்த நபரின் போக்கு தீவிரமடைந்ததால் எம்ஆர்டி ஊழியர்கள் எச்சரித்து வெளியேறச் செய்தனர்.