சிங்கப்பூருக்கான பயணத் திட்டங்களை தாமதப்படுத்துமாறு குடிமக்களை வலியுறுத்திய இரு நாடுகள்..!

Kuwait embassy in Singapore
Novel coronavirus: Kuwait, Qatar urge citizens to delay travel plans to Singapore

Coronavirus Singapore : மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் கத்தார் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன. அதில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சிங்கப்பூருக்கான பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

குவைத் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தனது ஆலோசனையை வெளியிட்டது, அதில் ஏற்கனவே சிங்கப்பூரில் உள்ள குடிமக்களை விரைவாக வெளியேறவும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு..!

நேற்று ஞாயிற்றுக்கிழமை, கத்தார் வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் தூதரகத்திலிருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் சிங்கப்பூர் செல்ல விரும்பும் அனைத்து கத்தார் குடிமக்களும் “கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமைகள் அமைதியாகும் வரை காத்திருக்க வேண்டும்” என்றும் மேலும் மிக அவசர தேவைகளை தவிர” என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தனது Dorscon அளவை ஆரஞ்சுக்கு உயர்த்திய பின்னர் சிங்கப்பூரில் உள்ள குவைத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 புதிய நபர்களை உறுதி செய்த சிங்கப்பூர்..!

குவைத் செய்தி நிறுவனத்தின்படி, சிங்கப்பூரில் உள்ள குவைத் நாட்டு மக்களை “விரைவாக வெளியேறவும், கட்டாய காரணங்களைத் தவிர்த்து அங்கு தங்குவதைத் தவிர்க்கவும்” என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிங்கப்பூர் செல்ல விரும்பும் தனது குடிமக்களுக்கும் குவைத் தூதரகம் இதேபோல், சாதாரண நிலைமைகள் திரும்பும் வரை காத்திருக்கவும் வலியுறுத்தியுள்ளது.