பேருந்து மோதிய விபத்தில் சைக்கிள் ஓட்டி மரணம்

(Photo via Reddit via The Straits Times)

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 49 வயதான பெண் சைக்கிள் ஓட்டி ஒருவர் (மே 3) நேற்று இரவு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து நான்யாங் டிரைவ் சந்திக்கு முன்பு, நான்யாங் கிரேஸண்ட் வழியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வருகை தடை – வெளிநாட்டு ஊழியர்கள் தட்டுப்பாட்டை கடுமையாகும்

நேற்று இரவு 8:40 மணிக்கு இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனை அடுத்து, சம்பவம் நடந்த இடத்திலேயே அந்த பெண் இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துவாஸ் விபத்தில் உயிரிழந்த தமிழர் உட்பட அனைவருக்கும் நன்கொடை பகிர்ந்தளிப்பு