சிங்கப்பூரில் ஊழியர்களின் திறமைக்கு இனி தனி மதிப்பு… 20,000 ஊழியர்கள் முதல் இலக்கு!

NTUC launches engagement exercise to workers
Photo: Today

சிங்கப்பூரில் ஊழியர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பதைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் தேவையான பயிற்சியைத் தொடங்கியுள்ளது தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC).

ஊழியர்களின் கவலைகள், முன்னுரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இலக்குகள் ஆகிவற்றை புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் அந்த பயிற்சியை NTUC தொடங்கியுள்ளது.

ஆறுமுகம் சாலையில் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

#EveryWorkerMatters Conversations எனப்படும் அந்த பயிற்சியில் வேலை தொடர்பான அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் கேட்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து வயது மற்றும் துறைகளைச் சேர்ந்த குறைந்தது 20,000 ஊழியர்களிடம் அந்த திட்டத்தை கொண்டு சேர்ப்பதே அதன் இலக்கு.

வெள்ளிக்கிழமை (12 ஆகஸ்ட்) இன்று தொடங்கி ஒரு வருடத்திற்கு இந்த கருத்தாய்வுகள் நடத்தப்படும்.

கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரை விட்டு வெளியேற்றம் – வேறு எங்கு சென்றார்?