சிங்கப்பூரில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய நர்சிங் ஹோம் உரிமம் ரத்து..!

Nursing home's licence revoked
Nursing home's licence revoked

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால், தெலுக் குராவில் (Telok Kurau) உள்ள நர்சிங் ஹோம் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.

தியான் லெங் (Thian Leng) முதியோர் இல்லம், உரிமம் தொடர்பான நிபந்தனைகளுக்கு மீண்டும் மீண்டும் இணங்க மறுத்துள்ளதாக அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த மே 2019 முதல் நிபந்தனைகளை மீறியதாக அது குறிப்பிட்டுள்ளது. அதன் காரணமாக அந்த இடம் கூடுதல் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர் மீது உணவுத் தட்டை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றச்சாட்டு..!

அதன் பின்னரும், அடுத்தடுத்த சோதனைகளில் நிபந்தனை மீறல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆண்டில், அங்குள்ள ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க செயல்படுத்தப்பட்ட COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அது மீறியதாக MOH குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் Lee Ah Mooi முதியோர் இல்லத்தில் COVID-19 அபாயம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நர்சிங் ஹோம்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

வருகையாளர்களை தவிர்ப்பது, பராமரிப்பாளர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான தொடர்புகளை எளிதாக்க தொலைபேசி மற்றும் காணொளி அழைப்புகள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பாக இடைவெளி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஊழியர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று பராமரிப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சும் உதவி வருகின்றன. மேலும், அங்கு ஊழியர்களுக்கு வேறு இடங்களில் மறு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg