சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி!

Observed a Counter Terrorism exercise involving more than 200 officers from Singapore Police Force and Singapore Civil Defence Force at 2.30 am on 2 August. (Photo : Singapore Police Force/FB Page)

சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (SCDF) 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாத செயல்கள் மற்றும் அதில் ஈடுபடுவோரை கண்டறிய ஒத்திகை பார்க்கப்பட்டது.

சிங்கப்பூரின் பாதுகாப்பு குழு அனைத்தும், குறிப்பாக போலிஸ் படை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான அதன் வலிமையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை கையாள்வதற்கான முக்கிய முகமையாக போலீஸ் திறம்பட செயலாற்றி வருகிறது.

இந்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும், மேலும் காவல்துறை மற்றும் SCDF வலிமையை சோதிக்கவும் நடத்தப்பட்டது.