OCBC வங்கி வாடிக்கையாளர்கள் QR கோடுகளை பயன்படுத்தி இனி ATM மூலமாக பணம் பெறலாம்!

OCBC Bank customers can perform ATM cash withdrawals using QR codes

OCBC வங்கி வாடிக்கையாளர்கள் QR கோடுகளை பயன்படுத்தி ATM மூலமாக பணத்தை இனி சுலபமாக எடுத்து செல்லலாம்.

OCBC மொபைல் செயலிகள் மூலம் QR கோடுகளை ஸ்கேன் செய்து பணத்தை பெறலாம்.

வாடிக்கையாளர் தங்களின் பாதுகாப்பான பரிவர்த்தனைக்காக கைரேகை, ஃபேஸ்பிரிண்ட் மற்றும் மொபைல் வங்கி Log in விவரங்களை பயன்படுத்தி இனி OCBC செயலி மூலம் பணத்தை சுலபமாக பெறலாம்.

இவற்றை பயன்படுத்தும் முறையால் பணபரிவர்த்தனை 45 நொடிகளாக குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ATM அட்டை மற்றும் பின் நுழைவு மூலமாக செய்வதால் வெறும் 80 வினாடிகள் மட்டுமே ஆகிறது.

புதிய சேவையை பெற ATM திரையில் “Withdraw Cash with OCBC Pay Anyone” இதை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த புதிய QR குறீயீடு பயன்பாட்டை அனைத்து OCBC வாடிக்கையாளர்களும் இனி அனைத்து OCBC ATM -களில் இந்த பணபரிவர்த்தனையை பெறலாம் என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட புதிய 22 ATM -களில் நாணயங்கள் மற்றும் டெபாசிட் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கைரேகை, ஃபேஸ் பிரிண்ட் மற்றும் மொபைல் வங்கி Login மூலம் பணபரிவர்தனை அங்கிகரித்த பின்னரே, பணம் ATM-இல் இருந்து விநியோகிக்கப்படும்.