சிங்கப்பூரில் OCBC வங்கி வாடிக்கையாளர்கள் இனி SingPassஐப் பயன்படுத்தி டிஜிட்டல் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம்..!

OCBC Bank is first in Singapore to enable use of SingPass
OCBC Bank is first in Singapore to enable use of SingPass (Photo: OCBC)

சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கியின் 1.8 மில்லியன் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள், SingPass பயன்படுத்தி வங்கிக் கணக்குகளை இணையத்தில் சரிபார்க்கவும், மேலும் அதன் மூலம் பரிவர்த்தனை செய்யவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OCBC Mobile Banking செயலி or இணைய வங்கிச் சேவை இரண்டையும் இனி SingPass மூலம் பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க : ஜூரோங் வெஸ்ட்டில் ஆடவரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டாவது சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு..!

SingPassஐப் பயன்படுத்தி டிஜிட்டல் வங்கிச் சேவையை வழங்கியுள்ள முதல் வங்கி OCBC ஆகும்.

குறிப்பாக OCBC வங்கியின் டிஜிட்டல் வங்கி தளங்களில், உள்நுழைய கைரேகை அல்லது முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு பதிலாக அடையாளக் குறியீடுகளையும், கடவுச் சொற்களையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்.

டிஜிட்டல் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் அணுகும்போது, பல அடையாளக் குறியீடுகளையும், கடவுச் சொற்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேக்கா நிலையம், ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடு உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg