சிங்கப்பூரில், பணத்தை தவறவிட்ட உரிமையாளரைத் தேடி முகநூலில் பதிவிட்ட நேர்மையான பெண்.!!

Woman finds cash left behind in Tampines OCBC ATM, posts on Facebook she is returning it to bank

சிங்கப்பூரில், பணத்தை தவறவிட்ட உரிமையாளரைத் தேடி வரும் நேர்மையான பெண்.

தவறவிட்ட பணத்தைக் கண்டுபிடித்த சம்மி சீக் என்ற பெண், பணத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் செப்டம்பர் 20 அன்று பேஸ்புக் குழுவில் இது பற்றிய ஒரு போஸ்ட் செய்தார்.

இந்நிலையில், இந்த போஸ்ட் 700 க்கும் மேற்பட்ட ஷேர்களையும், 400 க்கும் மேற்பட்ட கமென்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

அந்த பதிவை சீன மொழியில் சம்மி சீக் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவின் தமிழ் மொழிபெயர்ப்பு:

“யார் என்று தெரியாத பெண்ணுக்கு இது, நீங்கள் இந்த பதிவை பார்ப்பீர்களா ? என்று எனக்குத் தெரியாது.

காலை 9:45 மணியளவில், டம்பைன்ஸ் பஸ் இன்டர்சேஞ்சில் உள்ள OCBC ATMல், நீங்கள் கொஞ்சம் பணத்தை withdraw செய்தீர்கள், ஆனால் அதை எடுக்காமல் சென்று விட்டீர்கள்.

நான் பணத்தை மீட்டெடுக்கும் போது உங்களை அழைத்தேன், ஆனால் நீங்கள் கடந்து சென்று விட்டீர்கள், இருந்தும் நான் பின்வாங்கவில்லை.

மீண்டும், நான் உங்களை துரத்தினேன், ஆனால் மனித கடல் போன்ற கூட்டத்தில் உங்களை அடையாளம் காண முடியவில்லை.

வங்கியின் இந்த தகவலை தெரிவிக்க ஹாட்லைனை அழைத்தேன். இரவு வேலைக்குப் பிறகு உங்கள் பணத்தை OCBC இன் டாம்பைன்ஸ் கிளைக்கு கொண்டு வருவேன்.

நீங்கள் உரிமையாளராக இருந்தால், தயவுசெய்து கவலைப்பட வேண்டாம்.

சரிபார்ப்பு செய்தவுடன் பணத்தை உங்களிடம் கொடுப்பதாக ஹாட்லைன் பணியாளர்கள் தெரிவித்தனர்.

உண்மையிலேயே மன்னிக்கவும், வங்கி காலை 11 மணிக்கு மட்டுமே திறக்கப்படுவதால், என்னால் காத்திருக்க முடியவில்லை, அதனால் நான் இன்று இரவு (செப்.20) பணத்தை வழங்குவேன்,” என்று சம்மி சீக் தனது பதிவில் எழுதியிருந்தார்.