அக்டோபர் 20 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய விதி!

Photo: Time Out

சிங்கப்பூரில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் கோவிட்-19 தடுப்பூசி போடாதவர்கள் உணவு மற்றும் பானக் கடைகளுக்கு செல்ல அனுமதியில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதிய விதியை அறிவித்துள்ளது.

இந்த புதிய விதியினால் வேலைக்கு செல்லும் ஊழியர்களும், பயிற்சி வகுப்புகளுக்கு தங்களது பிள்ளைகளை அழைத்து செல்லும் பெற்றோர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

“லண்டன், சிங்கப்பூர் இடையே விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!

மேலும் நாளடைவில் இப்புதிய விதி, ஷாப்பிங் மால்கள், நடனப் பள்ளிகள், ஹாக்கர் சென்டர்கள் மற்றும் காபி ஷாப் போன்ற பொது மக்கள் அதிகமாக செல்லக்கூடிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.

இந்த புதிய விதியினால், தன்னுடைய இரு மகள்களையும், அவர்களின் கலை மற்றும் நடன பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, மளிகைக் கடைக்கு தானே செல்வது என்று தன்னுடைய வேலைப்பளு அதிகரித்து கடினமாக இருப்பதாக ஒரு குடும்பப் பெண் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்பெண் இவ்வாறு சிரமப்படுவதற்கு காரணம், இவருடைய கணவர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் என்பதே. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, இப்பெண்ணுடைய கணவர் அக்டோபர் 20 வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த புதிய விதியினால் இனி உணவு மற்றும் பானக் கடைகளுக்குச் சென்று சாப்பிட இயலாது. ஆனால் உணவுகளை பார்சல் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், தரம் குறித்து எழுந்த புகார் – கவனம் செலுத்தும் நிறுவனம்