சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

Photo: Air India Express Official Twitter Page

‘Omicron’ கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது புதிதாக அதிக வீரியம் கொண்டதாக உருமாறியுள்ளது. அதற்கு ‘Omicron’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘Omicron’ வகை கொரோனா உலகின் பிற நாடுகளுக்கு பரவி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கும் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான விதிமுறைகளை இந்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

இவ்வகை வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ள இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அந்த 12 நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – 30க்கும் மேற்பட்டோர் கைது

அந்த பட்டியலில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து வருவோர்களைக் கூடுதலாகக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ‘RTPCR’ நெகட்டிவ் சான்றிதழுடன் விமானத்தில் வந்திருக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வந்ததும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவு தெரியும் வரை விமான நிலையத்தில் தான் பயணிகள் இருக்க வேண்டும். தொற்று இல்லையெனில் ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்படுவர். எட்டாம் நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை.

கனரக வாகனத்தில் இருந்து பறந்த டயர் – கார் ஒன்றை தாக்கும் காணொளி!

விமான நிலையத்தில் தொற்று என்று கண்டறியப்பட்டால், உடனடியாக மாதிரி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பின்னர், தொற்று நெகட்டிவ் வந்த பின்பே டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

பயணத்திற்கு முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றீர்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு முந்தைய 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ‘RTPCR’ நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ‘AIR SUVIDHA’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிந்து வாடும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் VTL சேவை

‘Omicron’ வகை கொரோனாவை தடுப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.