வளாகத்தில் கரப்பான் பூச்சிகள்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு

(photo: mothership)

நார்த்பாயிண்ட் சிட்டியில் உள்ள OMU ஜப்பானிய ஓமுரைஸ் உணவகம், மே 4  முதல் மே 17 வரை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

உணவகத்தின் உரிமதாரர், 12 மாதத்தில் 12 குற்றப்புள்ளிகளை பெற்றதால் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகத்திற்கு மொத்தம் S$800 அபராதமும் விதிக்கப்பட்டது.

உணவக வளாகத்தில் கரப்பான் பூச்சிகள்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு

சுத்தமில்லா உணவை விற்றதும், உணவகத்தின் வளாகத்தை தூய்மையாக பராமரிக்காததும், மேலும் கரப்பான் பூச்சிகள் மொய்த்ததுமே, இந்த உணவகத்தின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகும்.

“அந்த உணவகத்தில் பணிபுரிவந்தவர்கள், உணவு சுகாதார பயிற்சிகள் மேற்க்கொண்டு தேர்ச்சி பெற்ற பின்னரே உணவை கையாளுவதற்கு அனுமதிக்கப்படுவர்.”

மேலும், உணவை கையாளுபவர்கள் தூய்மையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முறையாக தேர்ச்சி பெற்றவர்களையே வேளையில் அமர்த்தும் படியும், விதிகளை கட்டாயம் கடைபிடிக்கும் படியும் SFA வேண்டிக்கொண்டது.

சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தை மீறுபவர்கள் மீது எந்த தயக்கமும் இன்றி கடுமையான தண்டனை வழங்கப்படும் என SFA எச்சரித்துள்ளது.