சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா ஷட்டில் பஸ் முன்பதிவுகள் தொடக்கம்!!

Shuttle Bus bookings open

சென்டோசாவுக்கு வருபவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி அடுத்த திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் 26 முதல் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ஷட்டில் பஸ் பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம். இது அவர்களை பிரபலமான இடங்களான சிலோசோ மற்றும் டான்ஜோங் கடற்கரைகளுக்கு அழைத்துச் செல்ல உதவும்.

Ride Now Sentosa என்கின்ற அப்பிலிகேசன் மூலம் முன்பதிவு செய்யலாம். Grab நிறுவனத்தில் செய்வது போன்று பயணத்தை முன்பதிவு செய்யலாம்.

முதலில் சோதனைக்காக நான்கு தானாக இயங்கும் வாகனங்கள் மூன்று மாதம் சோதனைக்காக இயக்கப்படும். இந்த சோதனை நவம்பர் 15 வரை நடைபெறும்.

தற்போது இந்த வாகனம் வாரநாட்களில் ஒரு நாளைக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே இயங்கும். 10 பேரை அழைத்துச்செல்லும் அளவு கொண்டது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் நண்பகல் வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பொது விடுமுறைகளைத் தவிர்த்து வாரநாட்களில் இயங்கும்.

இது தானாக இயங்கும் வாகனம் என்பதால் பாதுகாப்பு கரணங்களுக்காக வாகனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஓட்டுநர் இருப்பார். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவர் வாகனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பயிற்சி பெற்றவர்கள்.

இந்த தானாக இயங்கும் பஸ் சேவை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்டோசா கோல்ஃப் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

சிங்கப்பூர், ஆசியாவில் முதலாவதாகவும் உலகில் இரண்டாவதாகுவும் தானாக இயங்கும் வாகனத்தை பயன்படுத்தும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.