கப்பலில் உள்ள கருவி தவறி விழுந்ததால் ஊழியர் உயிரிழந்தார்..!

(PHOTO: OFFSHORE ENGINEER)

கடந்த ஆண்டு மார்ச் மாதம், எண்ணெய் கப்பல் ஒன்றில் திசைத் திருப்பும் கருவி பொறுத்தப்படும்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததால் ஊழியர் ஒருவர் காலமானார்.

அந்த கருவி சராசரி எடையை காட்டிலும் 29 டன் அதிக எடையுடன் இருந்ததால் அதை கப்பலுடன் இணைக்கும் கொக்கி செயல் இழந்து கீழே விழுத்தது என்று கூறப்பட்டுள்ளது.

சிறுமி வாயில் மதுவை ஊற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த ஆடவருக்கு 28 ஆண்டுகள் சிறை

“சிட்டி ஆஃப் ஷங்­காய்” என்ற எண்ணெய் கப்பலில் மன்­தீப் குமார் (வயது 36) மற்றும் மியா முகம்­மது மாசும் என்ற ஊழி­ய­ரும் பழு­து­பார்ப்­புப் பணியில் ஈடுபடும்போது மன்­தீப் குமார் மீது அந்தக் கருவி விழுந்­த­தால் அவருடைய வலது கரம் துண்டிக்கப்பட்டு, அவருடைய இதயமும் செயல் இழந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மற்றொரு ஊழியருக்கு மோசமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழியர் மன்­தீப்பின் இறப்பு மிகவும் வருத்தத்திற்குரிய மற்றும் சோகமான தொழில்துறை சம்பவம் என்று இந்த வழக்கை விசாரித்த அர­சாங்க மரண விசாரணை நீதிபதி கூறியுள்ளார்.

இதுபோன்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் துறை தொடர்பான ஆபத்துகளை உணர்ந்து ஆயத்தமாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட தரப்­பு­க­ளுக்கு எதி­ராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மனிதவள அமைச்சு பரி­சீ­லித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பயிலரங்கு – தமிழ் மொழியில்…