COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக 73 வயதான ஆடவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.

இதையும் படிங்க : “இக்கட்டான காலங்களில் ஒற்றுமையும் விடாமுயற்சியும் நமது சிங்கப்பூரின் உணர்வை வரையறுக்கிறது” – பிரதமர் லீ..!

சம்பவம் 161 என அடையாளம் காணப்படும் அவர், COVID-19 காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரரான இந்த நபர், சஃப்ரா ஜுராங்கில் தனியார் உணவு விழாவுடன் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர்.

அவர் Bishan Street 13ல் தங்கியிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு (hyperlipidaemia) மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகிய பிரச்சனைகள் அவருக்கு இருந்ததாக MOH கூறியுள்ளது.

மேலும், NCID அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 347 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 5 பேர் பாதிப்பு..!