சிங்கப்பூர் வழியாக சீனா தப்பிய குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடிய சென்னை போலீஸ்

Chennai crime Interpol

ஆன்லைன் கடன் செயலி தொடர்பான விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘இன்டர்போல்’ போலீஸின் உதவியை நாடியுள்ளனர்.

சிங்கப்பூர் வழியாக சீனா தப்பிச் சென்ற முக்கிய நபரை பிடிக்க அவர்கள் இன்டர்போல் உதவியை கேட்டுள்ளனர்.

கொரோனா: துவாஸ் சவுத் தங்கும் விடுதியில் வசிக்கும் இந்திய நாட்டவருக்கு தொற்று!

இந்தியாவில் சீன நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செயலி நிறுவனங்களை நடத்தி வந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சீன நாட்டை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

பெங்களூரில் ட்ரூ கிண்டல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் பல்வேறு பெயர்களில் அவர்கள் அதனை இவர்கள் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களை விசாரித்ததில், சீனாவைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரில் நிறுவனங்களை நடத்தி வருவதும், பினாமிகள் மூலம் இந்தியாவில் நிறுவனங்களை நடத்துவதும் தெரியவந்தததாக Hindu Tamil குறிப்பிட்டுள்ளது.

அதில் ஆன்லைன் கடன்செயலி நிறுவனத்தை ‘ஹாங்’ என்ற சீனர், சிங்கப்பூரில் இருந்து கொண்டே இந்தியாவில் நிறுவனங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தததாக அது தெரிவித்துள்ளது. அவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்த ஹாங் சீனாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்ய இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்டர்போல் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.

சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கடுமையாகும் எல்லை நடவடிக்கை!