வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை அசுத்தமாக வைத்திருந்த விடுதி நடத்துனருக்கு அபராதம்..!

Operator of foreign worker dorms fined $118,000
Operator of foreign worker dorms fined (PHOTO: Yong Jun Yuan/TODAY)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை நடத்தி வரும் Labourtel Management Corporation என்ற நிறுவனத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) S$118,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2018 மற்றும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சேதமடைந்த விளக்குகள் மற்றும் சேதமடைந்த கழிப்பறை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க : செம்பவாங் கோயில் ஒன்றில் தீ – பெரும்பாலான கட்டிடங்கள் தீயினால் பாதிப்பு..!

நிறுவனத்தின் இரண்டு விடுதிகள், ஜுராங் பெஞ்சுரு தங்கும் விடுதி 1 மற்றும் 2 ஆகியவை வெஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கு அருகிலுள்ள பெஞ்சூரு பிளேஸில் அமைந்துள்ளன.

மற்ற இரண்டு, பூன் லே வேக்கு அருகிலுள்ள கியான் டெக் லேனில் உள்ள Blue Stars தங்கும் விடுதி மற்றும் காக்கி புக்கிட் ரோடு 3இல் உள்ள The Leo விடுதி ஆகியவை.

இதில் அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு S$59,000 அபராதமும், மற்றொரு ஊழியருக்கு S$22,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி சட்டத்தின் கீழ் முதலில் தண்டனை பெற்றவர்கள் அந்த ஊழியர்கள் ஆவார்கள்.

இதுபோன்ற குறைபாடுகள் மற்ற மூன்று தங்கும் விடுதிகளில், கடந்த 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் கடந்த ஆண்டிலும் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 5,700 ஊழியர்கள் வேலைக்கு மீண்டும் திரும்ப தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…