ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது ஆடவர் கைது

outrage of modesty train arrest
(Photo: Quinn Kampschroer via Pixabay)

பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 24 வயது ஆடவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது இன்று (பிப். 23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் விளக்குக் கம்பம் விழாமல் தடுத்த 13 பேருக்கு பொதுநல விருது!!

கடந்த பிப்ரவரி 7ம் தேதி ரயிலில் இருந்த பெண்ணிடம், அந்த ஆடவர் பாலியல் சீண்டல்களை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் தகவல் கொடுத்தார். பின்னர் அதுபற்றி பிப்ரவரி 9ம் தேதி புகார் அளித்தார்.

காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் மூலம், ஜுராங் காவல் பிரிவு மற்றும் பொது போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் ரயில் இருந்த இடத்தை பற்றி குறிப்பிடப்படவில்லை. மேலும், அந்த நபரின் அடையாளம் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை பற்றியும் காவல்துறை விரிவாகக் கூறவில்லை.

நேற்று பிப்., 22ஆம் தேதி காவல்துறையினர் அந்த ஆடவரை கைது செய்தனர்.

பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.

சரளமாக மாண்டரின், ஹொக்கியன் மொழி பேசி வாடிக்கையார்களை ஈர்க்கும் இந்திய ஊழியர்!