சிங்கப்பூரில் உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் உச்சிமாநாடு – 300க்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் பங்கேற்பு..!

Over 300 scientists from around the world to gather in Singapore (Photo : EPA-EFE)

Annual Global Young Scientists Summit : வருடாந்திர உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் உச்சிமாநாட்டின் (GYSS) எட்டாவது பதிப்பில் 320 எண்ணிக்கை கொண்ட மிகப் பெரிய இளம் விஞ்ஞானிகளை வரவேற்றுள்ளது.

இந்த உச்சிமாநாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 17 முக்கிய தலைவர்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் அதிகாரிகள் சோதனை…!

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு வகையான ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்த, 17 விருது பெற்ற பேச்சாளர்கள் சிங்கப்பூரில் ஒன்று கூடுகின்றனர். அவர்களில் நோபல் பரிசு மற்றும் பிற மதிப்புமிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் பெற்றவர்களும் அடங்குவர்.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக சிங்கப்பூரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள GYSS 2020 அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை பயோபோலிஸில் (Biopolis) உள்ள மேட்ரிக்ஸ் கட்டிடத்தில் (Matrix building) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கருப்பொருளாக மேம்பட்ட அறிவியல், ஒரு சிறந்த உலகத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விமானப் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஊழியர் உயிரிழப்பு..!

இந்த மாநாட்டில், விஞ்ஞானிகள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் முழுமையான விரிவுரைகள், குழு விவாதங்கள் மற்றும் குழு அமர்வுகள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள்.