சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி சிம் கார்டுகளில் $10 பணம் நிரப்பப்பட்டது..!

44,000 Overseas Employees Handed Over $ 10 In Mobile Phone Payment Card To Share Fasting Joy With Family In Their Homeland
44,000 Overseas Employees Handed Over $ 10 In Mobile Phone Payment Card To Share Fasting Joy With Family In Their Homeland. (Photo: Asia Times)

சிங்கப்பூரில் சுமார் 44,000 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் கைபே­சி சிம் கார்டு அட்டையில் $10 நிரப்­பப்­பட்­டது.

இஸ்லாமியர்களின் புனித தினமான நோன்­புப் பெரு­நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொண்­டா­டப்­பட்­டது. இத்­திட்­டத்­துக்­கான பெரும்­பா­லான நிதி­யா­த­ரவை ஃபேஸ்புக் சிங்­கப்­பூர் சமூக அற­நி­று­வ­னம் ஆகி­யவை வழங்­கின என்­று TWC2 அமைப்பு கூறியுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 373 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!

TWC2 எனும் வெளி­நாட்டு ஊழி­யர் நல அமைப்பு, இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று தங்களது M1, சிங்­டெல், ஸ்டார்­ஹப் சிம் கார்டு கட்­டண அட்­டை­யில் பணம் இல்லாதவர்­க­ளின் கட்­டண அட்டைகளுக்கு $10 தானி­யக்க முறை­யில் கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் திங்­கட்­கி­ழமை வரை பணம் நிரப்­பப்­பட்­டது என்று தெரிவித்துள்ளது.

தங்­கும் விடு­தி­க­ளாக மாற்­றப்­பட்ட தொழிற்­சா­லை­களில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கு 10,000 பணம் நிரப்­பும் கட்­டண அட்­டை­கள் (physical top-up cards) கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி கட்டண அட்டையில் பணம் நிரப்ப உதவ ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து இது வரை TWC2 அமைப்பின் திட்டம் வழி $1 மில்லியன் செலவிடப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இவ்­வி­யக்­கம் இது­வரை 90,000க்கு மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உதவியுள்ளது என்று தெரி­வித்த TWC2 அமைப்பு, சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் கட்டுமான ஊழியர்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யி­னர் இவர்­கள் என்­றும் தெரிவித்துள்ளது.

“அரசு சார்பற்ற எங்களைப் போன்ற சிறிய அமைப்பால் இதுபோன்ற பெரிய திட்டங்களை எங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பல அமைப்புகளின் உதவியின்றி செய்திருக்க முடியாது,” என்று TWC2 அமைப்பின் தலைவர் திருவாட்டி டெபி ஃபோர்டிஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் பணிநீக்கத்திற்கு ஆளான 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளில் இணைந்தனர்..!