சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பானாசோனிக் (Panasonic) நிறுவனம்

Google Maps

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் சிங்கப்பூரில் குளிர்பதன கம்ப்ரெஸ்ஸர்களின் (refrigeration compressors) தயாரிப்புகளை நிறுத்த போவதாக இன்று (செப். 23) கூறியுள்ளது.

இனி இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மலேசியா மற்றும் சீனா ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களின் தற்போதைய வசதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துவாஸில் உள்ள ஆலையில் வெடிப்பு: ஒருவர் மரணம் – இருவருக்கு பலத்த காயம்

இதன் விளைவாக சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் பானாசோனிக் நிறுவனம் கூறியுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட 700 ஊழியர்களில் பாதி பேர் சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் என்றும் அது கூறியுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமை இடமான சிங்கப்பூரில் 1,400க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து அந்நிறுவனம் வழங்கும் என்றும் கூறியுள்ளது.

கிருமி பரவல் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி