பெரும் தொற்றையும் பொறுட்படுத்தாமல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி – கிறிஸ்தவ அமைப்புகளை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

COVID-19 பரவலின் போது வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து சேவை செய்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

சவாலான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஊழியர்களுக்கு இக்கட்டான சமயத்தில், அவர்கள் வேளைக்கு செல்ல முடியாமல், வருமானம் இல்லாத கஷ்டமான சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

அவர்களுக்கு சிங்கப்பூரில் வாழும் கிறிஸ்தவர்கள் உதவி கரம் நீட்ட முன்வந்தனர். இதற்கு உந்துதலாக இருந்தது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள வசனம் என்றும் கூறியுள்ளனர்.

இதனை ஒருங்கிணைத்து முறையாக செயல் பட உதவியது AGWO (அல்லியன்ஸ் ஒப் கெஸ்ட் ஒர்க்கேர்ஸ்) என்ற அமைப்பு, இது ஹோப் இனியாஷியேட்டிவ் அலையன்ஸ் (HIA) இன் கீழ் 2019இல் உருவாக்கப்பட்டது. இதில் பல தேவாலயங்கள் உற்பட பல அமைப்புகளும் இணைத்து பங்காற்றி வருகின்றனர். இதில் குறிப்பிடப்பட்டவர்கள் எசேக்கியேல் டான் மற்றும் மூத்த போதகர் சாமுவேல் கிஃப்ட் ஸ்டீபன் இவர்கள் அமைப்புகளின் தலைவர்களாக செயலாற்றிவருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்தது, உணவு வழங்கும் திட்டம். இத்திட்டம்மானது புனித வெள்ளி அன்று தொடங்கப்பட்டது. அங்கு எவ்வளவு பேர் பட்டினியாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காக முதல் ஒரு வேலை உணவு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னாளில் இந்த சேவை பல மாதங்களாக தொடர்ந்தன. இதற்கு அரசாங்க அமைப்புகளும் உதவி செய்தன.

இது அவ்வளவு எளிதாக நடத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். தொற்று பரவல் அதிகமாக இருந்த அக்காலத்தில் தன் உயிரையும் பொறுட்படுத்தாமல் தன்னார்வலர்கள் பலர் உணவு விநியோகம் செய்தனர். இதில் மேலும் சவாலாக அமைந்தது நிதி திரட்டுவது. இந்த சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என தலைவர் டான் தெரிவித்துள்ளார்.

பல தேவாலயங்களின் உதவியுடன், AGWO 1 மில்லியனுக்கும் அதிகமான உணவு மற்றும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான அத்தியாவசிய பொருட்களை 300க்கும் மேற்பட்ட தங்குமிடங்களில் சுமார் 21,000 தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்தது.

அக்டோபர் 2020இல், சிங்கப்பூரின் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நல்ல அமைப்பு என்ற விருதையும் மற்றும் சிங்கப்பூரில் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதையும் வெளிநாட்டு ஊழியர்களுடன் சிறந்த பணிக்காக HIA பெற்றது.

இந்த தொண்டானது சர்வதேச ஊடகமான பிபிசியையும் சென்றடைந்தது. அவர்களும் இதனை பதிவிட தொடங்கினர்.

இந்த அமைப்பானது வெளிநாட்டு ஊழியர்களுடன் இன்று வரை நட்பு பாராட்டி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், வெசாக் டே, முனித வெள்ளி போன்ற பண்டிகைகளின்போதும் அவர்களுக்கு உணவு வழங்கி இணைத்து கொண்டாடிவருகின்றனர்.