தெற்காசிய ஊழியர்களின் தடையால் பரிதவிக்கும் கட்டுமான நிறுவனங்கள்

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

தற்போது நிலவிவரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலால் கட்டுமான நிறுவனங்கள் சந்தித்துவந்த இக்கட்டான சூழ்நிலை, தெற்காசிய ஊழியர்கள் தொடர்பான தடையால் மேலும் மோசமாகி உள்ளது.

மனிதவள பிரச்சனையை சற்று சமாளிக்கும் விதமாக சில கட்டுமான நிறுவனங்கள் இரு மடங்கு சம்பளம் தருவதாக கூறி ஊழியர்களை தக்கவைத்து கொண்டது. இருப்பினும் வேலையிட விபத்துகள் நிகழும் அபாயமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூல் நிறுவனத்திடம் 1,260 கோரிக்கை மனுக்கள் அனுப்பிய சிங்கப்பூர் – இணைய குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் 3,300 வேலையிட விபத்துகள் பதிவாகியுள்ளன, இதே காலகட்டத்தில் போன ஆண்டு 3,100 விபத்துகள் பதிவாகியிருப்பதாக தெரியவருகிறது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் கோவிட்-19 கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயமாக்கியதில் ஒரே வாரத்தில் 1000 ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர், மேலும் எல்லை கட்டுபாட்டு விதிமுறைகளை கட்டாயமாகியதன் மூலம் காலியான இடங்களையும் நிர்ப்பமுடியாமல் போயின.

கட்டுமானம், கடல் துறை போன்ற துறைகளில், 2019 டிசம்பர் மாத கணக்கெடுப்பின்படி சுமார் 370,100 ஊழியர்கள் பணியாற்றியதாகவும் அதுவே சென்ற ஆண்டு அது 311,000 ஆக குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MRT ரயிலில் பயணியை தாக்கிய சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைது

போன ஆண்டு ஜூன் மாதம் கிருமி தொற்று சற்று குறைந்த நிலையில் 30,000 ஊழியர்கள் வேலைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அது போதுமானதாக இல்லை என நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு விதிமுறைகளோடு வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும்படி கட்டுமான துறை சார்ந்த பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை கடந்த வாரம் சமர்பித்திருந்தனர். எல்லைகள் இவ்வாறாக தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் அனைத்துமே சவாலாகிவிடும் என கவலைக்குள்ளாகி உள்ளது கட்டுமான நிறுவங்கள்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வேலைகளை முடிக்க வேண்டிய சூழல் காரணமாக ஊழியர்கள் ஞாயிற்றுகிழமைகளிலும் வேலைக்கு வர வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது, இது அவர்களை மேலும் கவலைக்குள்ளாகி விபத்துகள் நேர காரணமாக அமையலாம் என எச்சரிக்கப்படுகிறது.

இதனால் சீனாவில் இருந்து வரும் ஊழியர்களுக்கு சில தளர்வுகளை வழங்கியுள்ளது கட்டுமான ஆணையம், அதன்படி அவர்கள் திறன் சார்த்த சான்றிதழை தங்களின் நாட்டில் முடிக்க தேவை இல்லை என கூறியுள்ளது.

தற்போதுவரை, 89 தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் (பிடிஓ) திட்டங்கள் உள்ளதாகவும், அவை முடிக்கப்பட மேலும் ஒரு ஆண்டிற்கு மேல் தாமதம் ஆகலாம் என தெரியவருகிறது.

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் கட்டுவதற்கான பணி ஈராண்டுகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மனிதவள அமைச்சகம்