Pasar malam இரவு நேர மார்க்கெட்: 20 உணவுக் கடைகள், விளையாட்டு என அனைத்தும் ஒரே இடத்தில்!

Pasar malam at Giant Hypermarket Tampines
I Love Tampines / FB and Giant Singapore / FB

தெம்பனீஸில் உள்ள ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் கார் பார்க்கில் இரவு நேர மார்க்கெட் என்றழைக்கப்படும் Pasar malam அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது Pasar malam மார்க்கெட்டில் 20க்கும் மேற்பட்ட உணவுக் கடைகளும், ஹலால் கடைகளும் அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உணவக லாரிகள், claw இயந்திரங்கள், கார்னிவல் கேம்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்கும் இடங்களும் இருக்கும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்த வட கொரியா – கடுமையாக எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர்

துரியன் பிரியர்களுக்கு இன்பச் செய்தியாக அங்குள்ள கடையில் பழங்களின் ராஜாவான துரியன் பழங்களை சாப்பிடலாம்.

Pasar malam அமைந்துள்ள முகவரி

  • 21 Tampines North Drive 2

எப்போது வரை?

  • நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை

திறக்கும் நேரம்

  • திங்கள் முதல் ஞாயிறு, மாலை 5 முதல் இரவு 10:30 வரை இயங்கும்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்… குழந்தைகள் இருக்கா?? – அப்போ உங்களுக்கு தான் இந்த ComLink ஆதரவு திட்டம்